மசாஜ் கிளப் போர்வையில் நடிகை வீட்டில் அழகிகள் விபசாரம்: டாக்டர் கைது- 2 பெண்கள் மீட்பு
சென்னையில் மசாஜ் கிளப்புகள் பலவற்றில் விப சாரம் நடைபெறுவதாக போலீ சுக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து மசாஜ் கிளப்புகளை கண்காணிக்க கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் மசாஜ் கிளப்பு களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை சாலி கிராமம் கண்ணாத்தாள் தெருவில் உள்ள பிரபல `பூ’ நடிகையின் வீட்டில் `கேர் அண்டு கிïர்” என்ற பெயரில் இயற்கை மூலிகை வைத்திய மையம் செயல்பட்டு வருவதாகவும், இங்கு ஆண்களுக்கு மசாஜ் செய்யப்படுவதாகவும், போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. சில நேரங்களில் மசாஜ் செய்ய வரும் வாலிபர்கள் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதாகவும் தகவல் வெளி யானது. இதனையடுத்து தென் சென்னை இணை கமிஷனர் துரைராஜ், தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி ஆகியோரது ஆலோசனையின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், விஜயகுமார் மற்றும் தனிப் படை போலீசார் இந்த மசாஜ் கிளப்பில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். பங்களா போன்று தோற்றம் அளித்த இந்த வீட்டில் படுக்கை அறைகள் மிகவும் சொகுசாக காணப்பட்டன. இங்கு வைத்து தான் கேரள அழகிகள் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மசாஜ் செய்ய விரும்பும் வாலிபர்களிடம் ரூ. 1000 முதல் 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. அங்கு கட்டு கட்டாக ஆணுறைகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மசாஜ் கிளப்பை நடத்தி வந்த டாக்டர் ராஜசீலன் (வயது40) கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக “பூ” நடிகையிடம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதற்காக மாதம் 10 ஆயிரம் வாடகை கொடுத்துள்ளார்.
மசாஜ் கிளப்பில் இருந்து நாகர்கோவிலைச் சேர்ந்த பொன்னி (23), கேரளாவைச் சேர்ந்த சிந்து (21) ஆகிய 2 பெண்களையும் போலீசார் மீட்டனர். இவர்கள் இருவரும் காப்பகத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.
போலீசில் சிக்கிய டாக்டர் ராஜசீலன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நான் இதற்கு முன்பு நாகர் கோவிலில் இதுபோன்ற மசாஜ் கிளப்பை நடத்தி வந்தேன். பின்னர் அங்கிருந்து சென்னை வந்து கடந்த 2 ஆண்டுகளாக சாலி கிராமத் தில் மசாஜ் கிளப்பை நடத்தி வருகிறேன். இதில் நல்ல வரு மானம் கிடைக்கிறது. பெண் கள்தான் அதிக அளவில் இங்கு வருவார்கள். வசதி படைத்த வாலிபர்கள் சிலரும் இங்கு அடிக்கடி வந்து மசாஜ் செய்து கொள்வார்கள். இதற்காக பெண்களிடம் வசூலிப்பதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்போம். நான் கொல்கத்தாவில் படித்து டாக்டர் பட்டம் பெற்றேன். இவ்வாறு அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரி வித்தனர்.
போலீசிடம் சிக்கிய இளம்பெண்கள் கூறும்போது, பெண்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறித்தான் எங்களை வேலைக்கு அமர்த்தினர். ஆனால் ஆண் களுக்கும் மசாஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டோம் என்றனர்.
சாலி கிராமத்தில் நடிகை ஒருவருக்கு சொந்தமான வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மசாஜ் கிளப்புக்கும் நடிகைக் கும் தொடர்பு உண்டா” என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.