திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது!!

Read Time:1 Minute, 44 Second

fd960d34-b0f7-4799-bf1d-07d4f64af962_S_secvpfதிருப்பதி மலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் ஆந்திரா, தமிழ்நாட்டில் 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாலும், வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர்.

வைகுண்டம் கியூ காம்பளக்சில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை காணப்பட்டது.

தர்ம தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆனது. பாத யாத்திரை பக்தர்கள் 8 மணி நேரமும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் பக்தர்கள் 3 மணி நேரமும் தரிசனத்துக்கு காத்து நின்றனர்.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமலையில் 100–க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. திரும்பிய திசையெங்கும் புதுமண தம்பதிகளாக காணப்பட்டனர்.

இதன் காரணமாக பலருக்கு தங்கும் அறை கிடைக்கவில்லை. அதோடு புரோகிதர் தட்டுப்பாடும் நிலவியது. பலர் தாங்கள் அழைத்து வந்த புரோகிதர்களை கொண்டு ஆங்காங்கே திருமணம் சடங்குகளை நடத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலும் ஒரு செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்!!
Next post ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா?: அயர்லாந்தில் நடந்தது வாக்கெடுப்பு!!