மேலும் ஒரு செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்!!

Read Time:2 Minute, 18 Second

681d7557-dc27-4164-a6d0-96e25bc7b0c6_S_secvpfதன்னைத் தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றம் செய்வது தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த செல்பி மோகம், ரஷ்யாவில் ஒரு இளம்பெண்ணின் உயிர் ஊசலாடக் காரணமாகியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள அலுவலம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு செல்பி எடுப்பதில் வெறித்தனமான ஆர்வம்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று அவருக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக் கொள்வது போன்ற புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் போட வேண்டும் என்பதே அந்த ஆசை. தனது விருப்பத்தை நிறைவேற்ற உடனே செயலில் இறங்கினார்.

தனது அலுவலகத்தில் பணிபுரியும் செக்யூரிட்டியின் துப்பாக்கியை திருட்டுத்தனமாக எடுத்தார். அதை தனது தலையில் குறி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார். ஆனால் கேமராவை அழுத்துவதற்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தினார். இதனால் துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து அவரது தலையில் பாய்ந்தது.

துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னைக்கு தீவிரவாதிகளால் ஆபத்தா?: புதிய ஆய்வு தகவலால் பரபரப்பு!!
Next post திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது!!