காஷ்மீரில் ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல்!!

Read Time:1 Minute, 36 Second

8eed9604-4547-43d5-8437-39d40f1c96ce_S_secvpfகாஷ்மீர் மாநிலம் கோர் பகுதியில் கடந்த 8-ந் தேதி 5 கிலோ போதைப்பொருளையும், சுமார் ரூ.9 லட்சம் ரொக்கபணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து பிரித்தோ தேவி என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் இறந்து போன சர்வூராம் என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி ஆவார்.

பிரித்தோ தேவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சர்வூராமின் சகோதரர் அஜீத் குமார் என்பவர் வீட்டில் போதைப்பொருள் மறைத்துவைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நேற்று அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருளையும், சுமார் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் வரும் தகவலை அறிந்து இருந்து அஜீத் குமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

சர்வூராம் மற்றும் பிரித்தோ தேவியின் மகன்கள் 2 பேரும் கடத்தில் வழக்கில் பஞ்சாப் சிறைச்சாலையில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தெய்வத்திருமகள்: தடைகளைத் தகர்த்தெறிந்து 10-ம் வகுப்புத் தேர்வில் சிகரம் தொட்டார்!!
Next post சென்னைக்கு தீவிரவாதிகளால் ஆபத்தா?: புதிய ஆய்வு தகவலால் பரபரப்பு!!