வல்லநாடு அருகே கோவில் பீடத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை!!

Read Time:4 Minute, 39 Second

90d35af8-1629-4058-a377-22c080eb3398_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் கீழ புத்தனேரியை சேர்ந்தவர் சுடலைகுமார் (வயது30). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் இவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்த்தனர். வருகிற 24–ந்தேதி சுடலைகுமாருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

இதனால் சுடலைக்குமார் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் கீழபுத்தனேரியில் உள்ள வீட்டிலேயே தங்கி இருந்தார்.

நேற்று இரவு சுடலைக் குமாரும், அவரது நண்பர்களும் அப்பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 11 மணி அளவில் மற்ற நண்பர்கள் வீட்டுக்கு போய் விட்டனர். சுடலைக்குமார் மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள முண்டசாமி பீடம் அருகே படுத்து இருந்தார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல், சுடலைக்குமாரை சுற்றி வளைத்து சரமாரி அரிவாளால் வெட்டியது. இதில் சுடலைகுமார் கோவில் பீடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் வளாகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு சுடலை குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்துக்கு முறப்பநாடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து சுடலை குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

கொலையாளிகளை பிடிக்க புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வசவப்பபுரம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சுடலைகுமார் கொலை செய்யப்பட்ட விபரம் அறிந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை வசவப்பபுரம் பகுதியில் உள்ள நெல்லை– தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியல் செய்ய திரண்டு வந்தனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் கிராம மக்கள் கீழபுத்தனேரியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுடலைகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுமாப்பிள்ளை நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்?: போலீசார் விசாரணை!!
Next post அரியலூர் அருகே கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கணவர்!!