வேகமாக சென்ற காரை பேனட்டில் ஏறி நிறுத்திய டெல்லி காவலர் – 200 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்!!

Read Time:2 Minute, 17 Second

579be2df-7633-47f6-8656-94c2eced8fb8_S_secvpfபோக்குவரத்து விதிகளை மீறி வேகமாக சென்ற காரை நிறுத்துவதற்காக பேனட்டில் ஏறிய டெல்லி காவலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.

இந்தியாவில் பொது மக்கள் வேண்டுமென்றே சாலைகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை. அதே போல் காவலர்கள் விதிமுறைகளை மீறுபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவதும் ஆச்சரியமான விஷயம் இல்லை. உண்மையில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் விதிமுறைகளை மீறுபவர்களை பிடிக்க தன் உயிரை பணயம் வைக்கும் சில காவலர்கள் தான்.

அப்படிப்பட்ட காவலர்களில் ஒருவர் தான் யோகேஷ். இவர் நொய்டா எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு கார் வேண்டுமென்றே போக்குவரத்து விதிமுறைகளை மீறிக்கொண்டு வேகமாக சென்றது. அந்த காரை மறிக்க முயன்றார் யோகேஷ். ஆனால் கார் நிற்காமல் வேகமாக அவரை மோதுவது போல் வந்தது. ஆனால் பயந்து விலகிவிடாமல் அந்த காரின் பேனட்டில் ஏறி இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டார். அந்த காரின் ஒட்டுனரும் சளைக்காமல் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு காரை ஓட்டி சென்றார். அப்போது இதை பார்த்துக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் காரை வழி மறித்து நிறுத்தினார்கள். பின்னர் காரின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிரை பணயம் வைத்து காரை நிறுத்திய காவலருக்கு உரிய மரியாதை செய்யப்படும் என டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஹாஸ்டல் காவலாளி, சமையல்காரர்!!
Next post விசாகப்பட்டினம் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பெண்ணின் கருப்பையில் இருந்த 10 கிலோ புற்றுக்கட்டி நீக்கம்!!