இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக மகளிர் போலீசார் செயல்படுகிறார்கள்: புகார் கூறிய இளம்பெண் தர்ணா!!

Read Time:3 Minute, 40 Second

3ab409a2-489f-4f52-927e-d98118a87429_S_secvpfதிருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). இவருக்கும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன் நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையம் மற்றும் கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு மாறுதலானார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25–ந்தேதி பரிமளா வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் முருகேசன் அவரை பலாத்காரம் செய்யததாக கூறப்பட்டது. இது குறித்து பரிமளா திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பும் பரிமளா உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் கடந்த 15–ந்தேதி திருச்சி 2–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

இதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் திருச்சி 2–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர கண்ணன் முன்பு கடந்த 18–ந்தேதி சரணடைந்தார். அப்போது 15 நாள் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டதுடன் ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் முருகேசன் நேற்று போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட வருகிறாரா? என்பதை கண்காணிக்க காலையிலேயே பரிமளா கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். பின்னர் முருகேசன் கையெழுத்திட வரவில்லை என்று கூறி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதை தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் அவரிடம், முருகேசன் ஏற்கனவே காலையிலேயே வந்து கையெழுத்து போட்டு விட்டு சென்றதாக கூறினர். இதை நம்பாத அவர் கையெழுத்து போட்டதை காட்டுமாறு கூறியதுடன் போலீசார் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று புகார் கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்!!
Next post சேலத்தில் லட்சக்கணக்கில் மோசடி: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு!!