அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க லஞ்சம் கேட்டதால் ஆம்புலன்சின் உள்ளேயே குழந்தையை பிரசவித்த பெண்!!

Read Time:1 Minute, 29 Second

af7d4abb-bf39-4ce8-bd6a-d4b75f7ef0d0_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது கணவர், ஆம்புலன்சை வரவழைத்து அருகாமையில் உள்ள ஜன்சத் நகர ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே பணியாற்றும் ஊழியர்கள் அந்தப் பெண்ணை அனுமதித்து பிரசவம் பார்க்க லஞ்சமாக பணம் கேட்டனர். பணம் தராவிட்டால் வேறு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லுங்கள் என்று கூறி விரட்டி விட்டனர். இதையடுத்து, ஆம்புலன்சில் ஏற்றி வேறொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வேளையில் நடுவழியில் ஆம்புலன்சின் உள்ளேயே அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

இந்த கொடூர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் ஜன்சத் நகர ஆரம்ப சுகாதார மையத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடித்து நொறுக்குடா அந்த வீடியோ கேம் பிளேயரை: ஆவேச அப்பாவின் வைரல் வீடியோ!!
Next post திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்!!