திருநங்கைகளுக்கென தனி பள்ளி, கல்லூரி தொடங்க திட்டம்: மிஸ் சென்னை நமீதா தகவல்!!

Read Time:1 Minute, 47 Second

d4ab1d7a-4d6b-41e8-b0a6-cf9290d6e96f_S_secvpfசென்னையை சேர்ந்தவர் நமீதா. திருநங்கையான இவர், மிஸ் சென்னை, மிஸ் புதுச்சேரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சிறந்த திருநங்கையாகவும் தேர்வு பெற்றார். இவர் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பல்வேறு அவமானங்களை சந்தித்து வளர்ந்த நான், மிஸ் சென்னை, மிஸ் புதுச்சேரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திருநங்கைகள் கஷ்டப்படக்கூடாது என கருதி ஏராளமானவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.

வயதான திருநங்கைகளுக்கென தனி காப்பகம் அமைத்து அவர்ளை பாதுகாப்பாகவும், திருநங்கைகள் கல்வி அறிவு பெற்று வாழ்வில் முன்னேற திருநங்கைகளுக்கென தனி பள்ளி, கல்லூரி தொடங்கவும் திட்டமிட்டு உள்ளேன்.

திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் கல்வி, வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு கிடைப்பதால் திருநங்கைகளின் வாழ்வு மேம்படும். அவர்கள் மீதான பாலியல் முத்திரையும் விலகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த சிறுமிக்கு நவீன சிகிச்சை!!
Next post சுவரில் துளை போட்டு மதுபாரில் கொள்ளையடித்த ஊழியர் கைது!!