மும்பை மருத்துவமனையில் 42 வருடமாக கோமாவில் இருந்த நர்சு அருணா ஷான்பாக் இன்று காலமானார்!!

Read Time:2 Minute, 53 Second

04626c97-fbf8-4ed8-b3b6-5eb652b45efd_S_secvpfமும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் 42 வருடம் கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று காலமானார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு, நவம்பர் 27-ந் தேதியன்று மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்தபோது, வார்டு பாய் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட அருணா கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் அவரது மூளை செயலிழந்தது. இதையடுத்து கே.இ.எம். மருத்துவமனையிலேயே அருணா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள வார்டு எண் 4-ல் அனுமதிக்கப்பட்ட அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நினைவு திரும்பிய பாடில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளர் பிங்கி விரானி மனு தாக்கல் செய்தார். ஆனால் கருணை கொலை செய்ய மருத்துவமனை ஊழியர்களும், நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்ததால் உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

இதனிடையே அருணாவின் சகோதரியான நாயக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அருணாவின் உடல்நிலை திடீரென மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவம் செய்யப்பட்டது. எனினும் சிறிது நாளில் அவரது உடல்நிலை மீண்டும் தேறியது. ஆகையால் மீண்டும் சாதாரண வார்டுக்கு அருணா மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனை நிர்வாகிகளும், ஊழியர்களும் சிரத்தை எடுத்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. மருத்துவர்கள் வெண்டிலேட்டர் வைத்து அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார். ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்த அருணாவுக்கு என்றாவது நினைவு திரும்பும் என்று எதிர்பார்த்த நிலையில், நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர் பிரிந்தது…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் 5 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்!!
Next post (படங்கள்) “புங்குடுதீவு வித்தியா”வின் அதிர்ச்சிமிகு கொலைப்படம்..!!