திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற புதுப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!
கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு நேற்று ஒரு புதிய செய்தியையும் கூடவே ஒரு மெஸேஜையும் அளித்த புதுமணப் பெண்ணுக்கு ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனம் 10 லட்சம் ரூபாய் பரிசளித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டம், அண்டுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணான சைட்டால்லி கலாக்கே என்பவருக்கும், யவடாமால் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரா மக்கோடே என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவாரத்துக்கு பின்னர், தனது வருங்கால கணவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட அந்த மணப்பெண் தனக்கு சீதனமாக தரும் தங்க நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் ஒரு ஆயத்த கழிப்பறையையும் (ரெடிமேட் டாய்லட்) வாங்கித்தரும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
அவர்களும் அதற்கு சம்மதிக்க, தண்ணீர் தொட்டி, வாஷ் பேசின் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்ட ஆயத்த கழிப்பறையை சீதனமாக புகுந்தவீட்டுக்கு கொண்டுசென்ற அந்த அபூர்வ புதுப்பெண்ணை தேவேந்திரா மக்கோடே வாழும் கிராமத்தை சேர்ந்த மக்கள் புதுமையாக பார்த்து, ஆச்சரியப்பட்டனர்.
திருமண சீதனமாக கொடுக்கும் தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களை விடவும். இந்த ஆயத்த கழிப்பறை மிகவும் பயனுள்ளது என்று கூறிய சைட்டால்லி கலாக்கேவின் விளக்கத்தை கேட்ட அவர்கள் வாயடைத்து நின்றனர். இந்த செய்தி நேற்று நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
இதனையடுத்து, நாடு முழுவதும் இலவச கழிப்பறைகளை கட்டி நிர்வகித்துவரும் ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனம், அந்தப் பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளித்துள்ளது.
அந்தப் பெண்ணின் செயல் அனைவருக்கும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் ஒரு நற்சேதியாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் தூய்மையான இந்தியா திட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் செயலாற்றிய அந்தப் பெண்ணுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயை ரொக்கப் பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளோம் என ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரான பின்டேஷ்வர் பதக் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating