நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிதி ஒதுக்கீடு

Read Time:2 Minute, 1 Second

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்காக தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்ட நிதியில் இருந்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும் 7 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்நிதியில் சொறிக்கல்முனை திருச்சிலுவை வித்தியாலயத்திற்கு பேன்ட் வாத்திய குழுவை உருவாக்க ஒரு இலட்சம் ரூபாவையும் றாணமடு இந்து மகா வித்தியாலயத்திற்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த 20 ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ளனர். இதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதனின் வேண்டுகோளின் பேரில் ஈழவேந்தன் எம்.பி.யின் வரவு- செலவுத் திட்ட நிதியிலிருந்து 15 ஆம் கிராம விவேகானந்த வித்தியாலயத்திற்கு தொலைபேசி இணைப்பைப் பெற 20 ஆயிரம் ரூபாவும் சொறிக்கல்முனை சாந்த குரூஸ் விளையாட்டு மைதானம் புனரமைப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாவும் 13 ஆம் கிராம சரஸ்வதி வித்தியாலயத்திற்கு றோணியோ இயந்திரம் கொள்வனவு செய்ய 75 ஆயிரம் ரூபாவும் 6 ஆம் கிராமம் அம்மணியார் வீதி, 4 ஆம் கிராம அம்மன் ஆலய வீதி என்பன புனரமைப்பதற்கு 3 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post `பார்முலா 1′ கார்பந்தயம்: பின்லாந்து வீரர் ரெய்க்கோனன் சாம்பியன்
Next post அமெரிக்க கவர்னராக இந்தியர் தேர்வு