டிரையம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய வகை பிரா..!!
டிரையம்ப் இன்டர்நெஷனல் லங்கா நிறுவனம் அண்மையில் மெஜஸ்ட்டிக் சிட்டியில் அமைந்துள்ள அதன் டிரையம்ப் பிரத்தியேக புட்டிக் நிலையத்தில் இலங்கை பெண்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய முன்புறமாக பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகளை (Front-closure bras)அறிமுகம் செய்துள்ளது.
மாபெரும் விற்பனை ஊக்குவிப்பை டிரையம்ப் முன்னெடுத்த அதேநாளில் 100 இற்கும் மேற்பட்ட டிரையம்ப்பின் தீவிர வாடிக்கையாளர்கள் புட்டிக்குக்கு விஜயம் செய்திருந்தனர்.
இந் நிகழ்வில் அனைவரையும் கவர்ந்த டிரையம்ப் முன்புறம் பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகளை சில்லறை மற்றும் நேரடி விற்பனை முகாமையாளர் நதீக விக்ரமகே அறிமுகம் செய்து வைத்தார்.
டிரையம்பின் முன்புறமாக பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகள் ஒவ்வொரு பெண்ணிற்கும் எடுப்பான தோற்றத்தை வழங்குகிறது. அழகிய லேஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய டிரையம்ப் இன் இந்த தெரிவுகள் முன்னெப்போதும் அனுபவித்திராத கவர்ச்சியையும், மதிமயக்கும் தோற்றத்தையும் பெண்களுக்கு வழங்குகிறது.
டிரையம்பின் முன்புறம் பொருத்தக்கூடிய பிரா வகைகள் சிறந்த ஷேப்வெயார் மற்றும் சிறந்த வடிவங்களை கொண்டுள்ளது. இந்த தெரிவுகள் உயர் சௌகரியத்தையும், கனகச்சிதத்தையும் வழங்குகிறது.
இந்த தெரிவுகள் ஐரோப்பிய தரங்களுக்கமைவாகவும், இலங்கை பெண்களின் உடல் தோற்றத்திற்கேற்பவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.கப் மற்றும் விங்க்ஸ்களின் மீது லேஸ் வேலைப்பாட்டைக் கொண்ட டிரையம்ப்பின் முன்புறம் பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகள் பல்வேறு புஷ் அப் மற்றும் half cup ஸ்டைல்களில் கிடைக்கின்றன.
மென்மையான இரு துணிகளை கொண்ட இந்த தெரிவுகள் கவர்ச்சி மற்றும் எடுப்பான தோற்றத்தை வழங்குகிறது. இந்த தெரிவுகளின் ஒவ்வொரு பகுதியும் புலனுணர்வை தூண்டும் வகையிலும், மிகச்சிறப்பான தோற்றத்தையும், உணர்வையும் கொடுக்கக்கூடிய வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மென்மையான மற்றும் நேர்த்தியான பூர்த்தியானது நீங்கள் அணிந்திருக்கும் மேலாடையின் மீது புலப்படாத வகையில் அமைந்துள்ளது.
இந்த புதுமையான தெரிவுகள் இன்றைய பேஷன் ஆடைகளின் கீழ் மென்மையான தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தெரிவுகள் 3 வடிவங்களில் கிடைக்கின்றன. under-wired 3⁄4 கப் மற்றும் இரு பக்கமும் trenslo bone மற்றும் ஓரளவு பேடட் கொண்ட முதல் தெரிவானது சிறந்த சௌகரியம், கனகச்சிதம் மற்றும் எடுப்பான தோற்றத்தை கொடுக்கிறது.
கவர்ச்சியான கப் மற்றும் கழற்றக்கூடிய குக்கீகளை இரண்டாவது தெரிவு கொண்டுள்ளது. under-wired 1⁄2 கப் பேடட் பிரா வகையானது சிறப்பான தோற்றத்தை வழங்குவதுடன், இவற்றை புஷ் அப் பிராவாகவும் அணிய முடியும். under-wired 1⁄2கப்பினை கொண்ட மூன்றாவது தெரிவானது சிறந்த தாங்கிப் பிடித்தலை வழங்குவதுடன், புலப்படும் தன்மையையும் குறைக்கிறது.
“டிரையம்பின் முன்புறம் பொருத்திக்கொள்ளக்கூடிய அனைத்து பிரா வகைகளும் திருமண ஆடைகள் முதல் மாலைநேர ஆடைகள் வரையான அனைத்திலும் பெண்களின் இயற்கையான உடல் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கைப் பெண்களின் இயற்கையான உடல் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன” என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஒவ்வொரு பெண்களுக்குமான இலவச உள்ளாடை குறிப்புகள், இலவச அளவு சரிபார்த்தல்கள் மற்றும் fit-on செயலமர்வுகள் மேற்கொள்ளபட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக, இரண்டு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு இலவச உள்ளாடைத் தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன.
Average Rating