ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்புக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார் நவீன் பட்நாயக்!!

Read Time:2 Minute, 12 Second

a6ae2fd7-d922-4aa6-8a1b-3b155b4573db_S_secvpfஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக் பெண்கள் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷனை இன்று வெளியிட்டார். இந்த வசதி புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதியில் உள்ள பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுகுறித்து பட்நாயக் கூறுகையில், ‘‘பெண்கள் பாதுகாப்புக்கான இந்த அப்ளிகேஷனை (Mo Sathi) வழங்கியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதியில் உள்ள பெண்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு தங்களது சொந்த பாதுகாப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

மேலும், பெண்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது போலீசார் அதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். போலீசார் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்த புதிய முறையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பட்நாயக் தலைமையிலான அரசு ஏற்கனவே பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மகிமா மற்றும் சிசு டெஸ்க் என்ற தனிப்பிரிவை எல்லா காவல் நிலையங்களிலும் அமைத்துள்ளது.

புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரத்தில் பெண்களுக்காக நீல நிற ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக குற்றவழக்கில் குற்றவாளியை உடனே கைது செய்து விரைவாக விசாரணை நடத்தி முடிக்க ஏற்கனவே போலீஸ் துறைக்கு பட்நாயக் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப்ட் கொடுத்த டிரைவரின் சில்மிஷத்தால் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த மூன்று பெண்கள்!!
Next post சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!!