வடிவேலுவுடன் ஆட ஸ்ரேயாவுக்கு ரூ.50 லட்சம்
சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தவர் ஸ்ரேயா தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என மெகா பட்ஜெட் படங்களில் நடிக்கிறார் தெலுங்கு படங்களிலும் பிசியாக உள்ளார். வடிவேலு கதாநாயனாக நடிக்கும் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடனமாட முன்னணி நடிகை தேவைப்பட்டார். இதற்காக ஸ்ரேயாவை அணுகினார். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் அவர் வடிவேலுவுடன் நடிப்பாரா? என்ற சந்தேகத்துலேயே அணுகினர். முமைத்கான், ரகசியா, நந்திதா போன்றோரைத்தான் ஒரு பாடலுக்கு வழக்கமாக ஆட வைக்கின்றனர். பெரிய கதாநாயகிகள் ஆடுவதில்லை. ஆனால் ஸ்ரேயா வடிவேலுவுடன் ஆட சம்மதம் தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். அதற்காக அவர் கேட்ட சம்பளம் ரூ. 50 லட்சம். ஒரு பாடல்காட்சி மற்றும் ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே அவரை நடிக்க கேட்டனர். ஒரு வாரத்துக்கு குறைவான நாட்களே அவரது கால்ஷீட் தேவைப்பட்டது. இதற்கு இவ்வளவு பெருந்தொகை கேட்டது தயாரிப்பு தரப்பினரை யோசிக்க வைத்தது. ஸ்ரேயா 100 நாட்கள் முழு படத்திலும் நடிக்க ரூ. 65 லட்சம்தான் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு படம் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்படுகிறது. எமலோகம், இந்திரலோகம் அரங்குகள் பல கோடி செலவில் செட் போடப்பட்டுள்ளன. இதில் ஆடுவதற்கு ஸ்ரேயாதான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தம்பி ராமையா விரும்பினார். ஏற்கனவே சிவாஜி படத்தில் வாஜி வாஜி மற்றும் சஹானா பாடல்களுக்கு பிரமாண்ட அரங்கில் ஸ்ரேயா நளினமாக ஆடியது அனைவரையும் கவர்ந்தது. வடிவேலுவுடன் அதே பாணியில் அவர் ஆடினால் பாடல் அனைவரையும் கவரும் என்று நினைத்தார்.
இதையடுத்து பணத்தை பார்க்காமல் ரூ. 50 லட்சத்தை கொடுத்து ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து விட்டனர். வடிவேலுவுடன் அவர் ஆடும் காட்சி கடந்த ஓரிரு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...