பால்ய விவாகத்தை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்த பஞ்சாயத்து!!

Read Time:1 Minute, 53 Second

3ea982e8-55b5-4c74-a041-ec456980e2e4_S_secvpfராஜஸ்தானின், லூனி தாலுகாவில் உள்ள ரோசிச்சான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது பால்ய விவாகத்தை ஏற்க மறுத்ததால், 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது கல்லூரி படிப்பு படித்து வரும் சாந்தாதேவி என்ற அம்மாணவிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் தான், தனக்கு பால்ய விவாகம் நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து சாரதி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்ட அம்மாணவி, இவ்விவகாரத்தில் தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதே சமயம் பால்ய விவாகத்தை தன்னால் ஒப்புக்கொள்ள முடியாது என்று பெற்றோரிடமும் சாந்தா தேவி கூறியுள்ளார்.

பெற்றோரும் தங்களது மகளின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், உள்ளூர் பஞ்சாயத்தோ திருமணத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியது. ஒரு கட்டத்தில் மிரட்டலையும் கையாள ஆரம்பித்தது. எனினும் எதற்கும் சாந்தாவின் குடும்பம் அஞ்சாததால், தற்போது 16 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தாவின் குடும்பத்தினர் பஞ்சாயத்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத்தில் தங்கியிருந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனப்பெண்: கூட்டாளி சிக்கியதால் தப்பி ஓட்டம்!!
Next post கர்நாடகாவில் 2 பெண்கள் – குழந்தை உள்பட 5 பேர் கொலை: போலீசார் விசாரணை!!