ஈழத் தமிழர் ஆதரவு பேரணி -திருமாவளவன்

Read Time:2 Minute, 3 Second

thiruma20051227.jpgஈழத் தமிழர்களை பாதுகாக்க அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் மனித நேய பேரணி மற்றும் பொதுக் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்தப் பேரி மன்றோ சிலையில் தொடங்கும். பெரியார், அண்ணா சிலை வழியாக சேப்பாக்கத்தில் முடிவடையும். இதைத் தொடர்ந்து மைலாப்பூர் மாங்கொல்லையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மதுரை ஆதீனம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டக் சேதுராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தப் பேரணி, பொதுக் கூட்டத்தில் சினிமா துறையினரும் பங்கேற்க வேண்டும். இதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், சத்யராஜ், விஜய், மணிவண்ணன். பாரதிராஜா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால், வெளிநாடுகளில் உள்ளதாகவும், பிஸியாக இருப்பதாகவும் பதில் கிடைத்தால் அவர்களுடன் பேச முடியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் ஈழத் தமிழ்ழர் பாதுகாப்பு பேரணியில் பங்கேற்க வேண்டும். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தலையிட வேண்டும், சிங்கள ராணுவத்துக்கு எந்த வகையிலும் உதவக் கூடாது என்று வலியுறுத்தியே இந்த பேரணி நடக்கிறது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 3-வது இடத்தையாவது ஜெர்மனி பிடிக்குமா? போர்ச்சுக்கல்லுடன் நாளை மோதல்
Next post 25 தீவிரவாதிகள் படுகொலை: பாக்.பாதுகாப்பு படை அதிரடி