கழிவறையால் முடிவுக்கு வந்த கணவன் மனைவி பிரச்சனை!!

Read Time:1 Minute, 59 Second

776cfa12-1746-4567-b675-a8a1d1883a6e_S_secvpfமேற்கு வங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தில் உள்ள மஜ்தியா என்கிற கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் ரிங்கு மற்றும் மோண்டல். 2001-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. 2 வருடம் திருமண வாழ்க்கை நிம்மதியாகத்தான் சென்றது.

ரிங்கு தன் மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்ததிலிருந்து உறவுக்குள் விரிசல் உண்டானது. வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் மோண்டல் வயல் வெளிக்குச் சென்றே காலையும் இரவும் தனது இயற்கை உபாதைகளைக் கழிப்பது வழக்கம். “நீ மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்” ”வயலில் யாரையோ ரகசியமாக சந்திக்கிறாய்” என்று வாய்க்கு வந்த படி ரிங்கு பேசத் தொடங்க பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ரிங்குவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு நடைபெற்ற காலத்தில் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கு வில்லன் கழிவறைதான் என்பதை தம்பதியர் இருவரும் உணர்ந்து கொண்டனர்.

பிறகென்ன, மத்திய அரசின் அனைவருக்கும் கழிவறை திட்டத்தை பயன்படுத்தி இலவசமாக தங்கள் வீட்டிற்குள்ளே கழிவறை கட்டினர். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். கழிவறையால் தொடங்கிய பிரச்சினை அரசின் இலவச கழிவறை திட்டத்தால் சுபமாக முடிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவம் படித்து வந்த உ.பி. மந்திரியின் மகள் கங்கையில் மூழ்கி பலி?
Next post தெரு குத்துச்சண்டைப் போட்டியில் 17 வயது வாலிபர் பலி!!