விபத்தில் பெற்றோர் பலி: ஆதரவு இல்லாமல் தவிக்கும் ஒரு வயது பெண் குழந்தை – அரசு உதவி கேட்கும் உறவினர்கள்!!

Read Time:3 Minute, 18 Second

a9b588dc-6c57-47f6-96e6-78a043e6c4eb_S_secvpfஅணைக்கட்டு அடுத்த ஊனைமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(33). இவரது மனைவி வெண்ணிலா(31). இவர்களுக்கு சாய்குமார்(3), ஒன்றரை வயது சாசினி ஆகிய 2 குழந்தைகள்.

செல்வம் சென்னை மணலியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் செல்வம் நேற்று முன்தினம் மாலை பைக்கில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான ஊனை மோட்டூருக்கு வந்தார்.

சேண்பாக்கம் மேம்பாலம் மீது பைக் வந்த போது பக்கவாட்டு சுவர் மீது பைக் மோதியதில் அதில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு 50 அடி பள்ளத்தில் விழுந்தனர்.

இதில் செல்வம் அவரது மனைவி வெண்ணிலா, மகன் சாய்குமார் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். குழந்தை சாசினி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குழந்தையை போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இறந்த செல்வம், வெண்ணிலா, சாய்குமார் ஆகியோரின் உடல்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து விட்டு நேற்று சொந்த கிராமமான ஊனைமோட்டூருக்கு கொண்டு வரப்பட்டது.

3 பேரின் உடல்களும் அடுத்தடுத்து பக்கத்திலேயே வைத்திருந்ததை பார்த்து கிராம மக்கள் கதறி அழுதனர். தாய், தந்தை, அண்ணனை இழந்து விட்டு தப்பி பிழைத்த குழந்தையை பார்த்து மேலும் கதறி அழுதனர்.

கலையரசு எம்.எல்.ஏ. பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் இறந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈமச்சடங்கிற்காக சொந்த பணம் ரூ.10 ஆயிரத்தை கலையரசு எம்.எல்.ஏ. வழங்கினார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் உயிர் பிழைத்த குழந்தை ஆதரவு இல்லாமல் தவிக்கிறது. குழந்தையை பாதுகாக்க அவரது குடும்பத்தினருக்கு அரசிடமிருந்து நிதியுதவி பெற்று தரும்படி கேட்டனர். இதற்கு கலையரசு எம்.எல்.ஏ. நிவாரண நிதியில் இருந்து பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

மாலையில் 3 பேரின் உடல்களையும் ஒரே வாகனத்தில் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று கணவன், மனைவியை புதைத்தனர். மகன் சாய்குமாரை எரித்தனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் இறந்த சம்பத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துணி திருடியதாக வீட்டில் சோதனை: ஜவுளிக்கடை ஊழியர் அவமானத்தில் தற்கொலை!!
Next post ஏமாற்றிய இயக்குனர் – நடிகை வேதனை!!