சேலம் புதிய பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள்!!

Read Time:3 Minute, 20 Second

d76ba455-a348-46f9-b545-ebc58ba7c70a_S_secvpfதமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் இன்று காலை நடந்தது.

இதுபோல் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணை தலைவர் எஸ்.கவிதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எம்.முனுசாமி தொடங்கி வைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.மோகன், ஏ.ஐ.டியூசி. மாவட்ட தலைவர் வேணுகோபால், நிர்வாகிகள் எம்.முனுசாமி, ராஜேந்திரன், ஜீவானந்தம், எம்,.ராமன், விமலன், பாலன் மற்றும் மாநில குழு உறுப்பினர் கீதா, மாவட்ட துணை செயலாளர் சாந்தி, சின்னையன் நகர் கிளை செயலாளர் வீரம்மாள் மற்றும் தங்கம்மாள், ஜானகி, ஈஸ்வரி, சரோஜா, மாதேஸ்வரி, செல்வி, விஜயா உள்பட பலர் பேசினர்.

இதில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ‘டாஸ்மாக் கடையை மூடு, குடும்பத்தை சீரழிக்கும் குடியை நிறுத்த மதுபான கடையை உடனே மூடு’ என்பது போன்ற கோஷங்களை முழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர் கைகளில் பூட்டுக்களை எடுத்து வந்து இருந்தனர். இவர்கள் மதுபான கடைக்கு சென்று பூட்டு போட முயன்றனர். இவர்களை சூரமங்கலம் உதவி கமிஷனர் விஜய்கார்த்திக் ராஜ், இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், குமரேசன் தலைமையிலான போலீசாரும், மகளிர் போலீசாரும் தடுத்தனர். ஆனால் பெண்கள் பலர் பெண் போலீசாரை தள்ளிக் கொண்டு கடைக்கு செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இவர்களை மற்ற பெண் போலீசார் பிடித்து கொண்டனர். இவர்களை தள்ளிக்கொண்டு பெண்கள் முண்டியடித்து மதுபான கடைக்கு சென்றனர். இதனால் போலீசார் கயிறு கட்டி யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தனர்.

இதனால் போலீசுக்கும், பெண்களுக்கும் தள்ளு முள்ளு நடந்தது. இதில் சில பெண்கள் கீழே விழுந்தனர். இவர்களை நிர்வாகிகள் தூக்கிவிட்டனர். பின்னர் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 199 பேரை கைது செய்தனர். இவர்களில் 144 பேர் பெண்கள். கைதான அனைவரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த தள்ளுமுள்ளுவினால் சேலம் புதிய பஸ்நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது!!
Next post துணி திருடியதாக வீட்டில் சோதனை: ஜவுளிக்கடை ஊழியர் அவமானத்தில் தற்கொலை!!