சக ஊழியருடன் ரகசிய உறவு : பிரிட்டனில் இதெல்லாம் சகஜம்

Read Time:2 Minute, 36 Second

” பிரிட்டனில் பணிக்கு செல்லும் பெண்களில் 10 பேரில் ஆறு பேர் சக ஊழியருடன் ரகசிய உறவு வைத்துள்ளனர்’ என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு இரண்டாயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு; சக ஊழியருடன் காம விளையாட்டுகளில் ஈடுபடுவதையும், ரகசிய உறவு வைத்துக் கொள்வதையும் பெரிய விஷயமாகவே 89 சதவீத பெண்கள் கருதவில்லை. நிறுவன உரிமையாளருடன் உறவு வைத்து கொள்வதை நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு காலம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி விட்டது. இதை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர் என்ற போது, சக ஊழியர்களுடன் உறவு வைத்து கொள்வதில் என்ன தவறு உள்ளது என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில் தான் ஆண்களும், பெண்களும் அலுவலகத்தில் அதிக நேரம் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. இதில் இருந்து விடுபட சக ஊழியரின் நட்பை ஒரு மாற்று வழியாக கருதுகிறோம் என்றும் பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களில் 64 சதவீதம் பேர் சக ஆண் ஊழியர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். 10ல் எட்டு பேர் உடன் பணியாற்றுபவருடன் பழகி வருகின்றனர். அதிகாரத்தில் உள்ள ஆண்களுக்கு தான் பெண்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. தங்களை விட உயர்ந்த நிலையில் உள்ள ஆண்களுடன் பழகுவதை விரும்புவதாக 61 சதவீத பெண்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற உறவு வைத்துள்ளவர்களில் வெகு சில பெண்களே வேலையை இழக்கின்றனர். சக ஆண் ஊழியர்களுடன் சகஜமாக பழகுவது வேலையை எளிதாக்குகிறது என்பது பெண்களின் எண்ணமாக உள்ளது. 10ல் மூன்று பெண்கள் பணி செய்யும் இடத்திலேயே செக்ஸ் உறவும் வைத்து கொள்கின்றனர். இவ்வாறு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேஷியா: கடலில் கப்பல் மூழ்கி 29 பேர் பலி
Next post காதலர் டோடி பயத் டயானாவுக்கு கொடுக்க இருந்த நிச்சயதார்த்த மோதிரம்: விசாரணைக்குழு நீதிபதி பார்வையிட்டார்