தாம்பத்யத்தில் தன்னிறைவு: உலகில் ஏழாவது இடத்தை பிடித்த இந்தியர்கள்!!

Read Time:2 Minute, 7 Second

58cd3e51-e6f5-4f9f-9127-942bd7993a01_S_secvpfமனிதனின் மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுகின்றது. மன ஆரோக்கியத்துக்கு மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கை வழி வகுத்து தருகின்றது.

அவ்வகையில், உலகம் முழுவதும் வாழும் மக்கள் தாம்பத்ய இன்பத்தில் எந்த அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளனர்? என்பதை கண்டறிய பிரபல கருத்தடை சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான ‘டியூரெக்ஸ்’, 26 நாடுகளை சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் 44 சதவீதம் மக்கள் மட்டுமே தங்களது தாம்பத்ய வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படி, சாத்தியமான வகையில் கருத்து கூறியவர்களில் சுவிட்ஸர்லாந்து நாட்டினர் முதல் இடத்திலும், அதற்கடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், பிரேசில் ஆகிய நாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தியர்கள் ஏழாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த கருத்து கணிப்பை நடத்திய நிறுவனத்தின் கூற்றின்படி, ஓரளவுக்கு வயதான பின்னர் தம்பதியருக்கு தாம்பத்ய உறவில் நாட்டமின்மை உருவாக தொடங்கி விடுகின்றது. இதற்கு மாறுபட்ட வகையில் உடல் அளவிலும், மனதளவிலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தாம்பத்யத்தை ஒதுக்குவது இல்லை. அந்த வகையில் அவர்கள் எப்போதுமே மன ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் தாம்பத்யத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக உள்ளனர் என தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகாரில் மனைவியுடன் மருத்துவர் கடத்தல்!!
Next post செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி!!