பிரான்ஸில் புலிகளின் 5 உறுப்பினர்கள் கைது

Read Time:5 Minute, 16 Second

ltt-franz.gifபிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட ஏனைய முக்கிய நகரங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கத்தினரின் புதிய தலைவராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்த ஸ்ராலின் சவரிமுத்து எனப்படும் புலிகள் இயக்கப்பிரமுகர் உட்பட ஐந்து முக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களை பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மையில் கைது செய்துள்ளனர். இவ்வாறு பாரிஸ் புலிகள் தலைவர் ஸ்ராலினும் ஏனைய நான்கு பிரபல புலிகள் இயக்கத்தினரும் பாரிஸில் தமிழர்கள் செறிந்து வாழும் “லிற்றிள் ஜவ்னா” (Little jaffna) அல்லது பிரான்ஸ் மொழியில் “கெயா டு நோர்ட்” எனப்படும் பகுதியில் வைத்தே தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மேற்படி புலிகள் இயக்கத் தலைவர் மற்றும் உதவியாளர்களின் இருப்பிடங்களில் மேற்கொண்ட சோதனைகளின்போது அவர்களிடமிருந்து முக்கிய “சீடி” இருவட்டுகளையும், பெருந்தொகையான யூரோ பணத்தொகைகளையும் மற்றும் பிரபல வங்கிகளிலிருந்து பெறப்பட்ட “கிறடிற்காட்” கடன் அட்டைகளையும் பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப குறித்த “சீடி” இறுவட்டுகளில் புலிகள் இயக்கத்தின் “கரும்புலிகள்” படைப்பிரிவின் தற்கொலை குண்டுதாரிகளின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் உட்பட தற்கொலைத்தாக்குதல்கள் பற்றிய அனைத்து விபரங்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைதுசெய்யப்பட்ட வேளையில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடன்அட்டைகளைச் சோதனையிட்ட பொலிஸார் அவற்றிலிருந்து சுமார் 40,000 யூரோ பணத்தொகையை அவர்கள் களவாடியிருப்பதாகவும் இவ்வாறு பண மோசடிக்காகப் பயன்படுத்தப்பட்ட 14 கிறடிற் காட் கடன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பாரிஸில் செயற்படும் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஸ்ராலின் சவரிமுத்து உட்பட ஐந்து முக்கிய புலிகள் இயக்கத்தினரும் பிரான்ஸ் பயங்கரவாதத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளும் பலமும் பெருமளவில் முடக்கப்பட்டுவிட்டதாகவும் இவ்வாறு பிரான்ஸில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் பிரான்ஸ் அரசு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஐந்து புலிகள் இயக்கத்தினரும் பிரான்ஸ் குடியுரிமை உடையவர்கள் எனவும் இவ்வாறு இவர்கள் பிரான்ஸில் வாழும் தமிழர்களிடமிருந்து புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக சட்டவிரோதமாகப் பெருந்தொகையான பணத்தைச் சேகரித்துள்ளது மட்டுமன்றி நோர்வே, டென்மார்க், சுவிற்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றும் அங்கு வசிக்கும் தமிழர்களிடம் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்துள்ளார்கள் என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததாக பிரான்ஸ் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு புலிகள் இயக்கத்துக்காக செயற்படும் ஏனைய குழுவினரையும் கைதுசெய்வதற்காக பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் அடிக்கடி சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை பாரிஸ் உட்பட பிரான்ஸின் முக்கிய நகரங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் வேலைநிறுத்தம்
Next post கராச்சியில் பயங்கரம்: பெனாசிரை கொல்ல முயற்சி- தற்கொலைப்படை தாக்குதலில் 133 பேர் பலி