தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கின்றனர்: சர்வேயில் தகவல்!!

Read Time:2 Minute, 13 Second

511e2d7f-b318-4d05-9a35-375eac81e827_S_secvpfதமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிப்பது சர்வேயில் தெரிய வந்துள்ளது.

2011–ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதில் குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் நாடு முழுவதும் 9 சதவீதம் குடும்பங்கள் விதவைகள் பொறுப்பில் இயங்குவது கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்பத்தை தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மிகப் பெரிய உத்தரபிரதேச மாநிலத்தில் 7 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை ஏற்று நிர்வகிக்கின்றனர்.

2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள் தொகை 121 கோடி. அவர்களில் 5 கோடியே 55 லட்சம் பேர் விதவை பெண்கள். இவர்களில் 2 கோடியே 23 லட்சம் பேர் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 22 லட்சத்து, 33 ஆயிரம் விதவைகளும், உத்தரபிரதேசத்தில் 24 லட்சத்து 62 ஆயிரம் விதவைகளும் குடும்ப பொறுப்பு ஏற்றுள்ளனர். அதற்கு வயது வரம்பு அதிக வித்தியாசத்தில் திருமணம் செய்வதே காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அவர்களை விட 5 முதல் 10 வயது குறைவான பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

அதனால் பெண்களுக்கு முன்பே ஆண்கள் இறந்து விடுவதால் குடும்ப பொறுப்பை பெண்கள் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபுணர் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்: உரையாடல் பதிவை வெளியிட்டார்!!
Next post சவுகார்பேட்டையில் 3–வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி!!