உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தூங்கிய சிறுமி தூக்கி சென்று கற்பழிப்பு: திருமணமான வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 46 Second

c22d1649-5b41-4fd9-b3d9-d0575afe3c63_S_secvpfஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிறுமி சாதனா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இரவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் (34) என்பவர் வீட்டிற்குள் புகுந்து சாதனா வாயில் துணியை திணித்து அங்கிருந்து தூங்கி சென்றார்.

மறைவான இடத்திற்கு கொண்டு சென்று சிறுமியை கற்பழித்தார். சிறிது நேரம் கழித்து சாதனாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவள் கற்பழிக்கப்பட்ட விஷயம் தெரிய வந்தது. சிறுமியை கற்பழித்த முருகன் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார்.

சாதனாவின் பெற்றோர் முருகன் வீட்டிற்கு சென்று இதுபற்றி கேட்டனர். அப்போது செண்பகம் முருகனின் தந்தை அண்ணாமலை, தாயார் சரஸ்வதி ஆகியோர் சேர்ந்து சாதனாவின் தந்தையை தாக்கினார்கள்.

இதுபற்றி அவர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரின் மனைவி மற்றும் பெற்றோரை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பூரில் ஏ.டி.எம்மில் 200 ரூபாய் எடுத்து கொடுத்து விட்டு 19 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சிறுவன்!!
Next post வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் கைது!!