ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் வேலைநிறுத்தம்

Read Time:1 Minute, 10 Second

ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் இந்த வாரத்தில் 2-வது முறையாக நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில் பயணிகள் அலுவலகங்களுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். அந்த நாட்டில் உள்ள 34 ஆயிரம் ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்ற ரெயில்வே தொழிலாளர்களுடன் தங்களை சேர்க்காமல் தங்களுக்கு தனி சம்பளம் தரவேண்டும். 31 சதவீத சம்பள உயர்வு தரப்படவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை தான் அவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இப்போது மீண்டும் 2-வது முறையாக அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தைப்பொங்கல் தினத்தன்று புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யத் திட்டம்
Next post பிரான்ஸில் புலிகளின் 5 உறுப்பினர்கள் கைது