செங்கோட்டை பகுதியில் ஆளில்லாத வீடுகளில் வயர்களை திருடிய மின்வாரிய ஊழியர் கைது!!

Read Time:2 Minute, 1 Second

621f381d-08b4-4f71-8a18-3aaf7a425800_S_secvpfநெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். அதே ஊர் காலனி தெருவை சேர்ந்தவர் பூவம்மாள், சாமி. இவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் அவர்களது வீடுகளில் இருந்த மின்வயர்கள் திருட்டு போனது.

இது குறித்த புகாரின் பேரில் இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், சிவநாதன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சங்குபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த தர்மராஜ் (வயது 45) என்பதும் நயினாகரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர் வைத்திருந்த மின்வயர்கள் குறித்து விசாரிக்கும் போது அவர் வெங்கடாச்சலம், பூவம்மாள், சாமி ஆகியோரது வீடுகளில் இருந்த மின்வயர்களை திருடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 300 மீட்டர் மின்வயர்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6 ஆயிரம் இருக்கும். தொடர்ந்து தர்மராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகளில் உள்ள மின்வயர்களை மின்வாரிய ஊழியரே திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் 3 குழந்தைகளை பிளேடால் அறுத்துக்கொல்ல முயன்ற தந்தை: போலீசார் விசாரணை!!
Next post ஸ்ரீவைகுண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது!!