விஷம் கொடுத்து 3 பேர் கொலை: கைதான அண்ணி – கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

Read Time:4 Minute, 37 Second

fdb90378-40b7-468c-8369-549ad385d726_S_secvpfதிருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமார் ராமநாதபுரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் மேட்டுசக்கர குப்பத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேலை காரணமாக ராமநாதபுரம் செல்லும் உதயகுமார், எப்போதாவது தான் ஊருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில், உதயகுமாரின் 2 தங்கைகள் லட்சுமி, உதயகுமாரி ஆகியோர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்தனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2 பேரும் இறந்ததாக அனைவரும் நம்பினர்.

இதை தொடர்ந்து கடந்த 26–ந் தேதி உதயகுமாரின் தம்பி லட்சுமணன் விஷம் கலந்த பாலை குடித்ததால் இறந்தார். தந்தை பாலு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரின் மனைவி ஷில்பாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஷில்பா திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடன் தர்மபுரியை சேர்ந்த சரவணன் என்பவரும் வேலை செய்தார். இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

இந்த நிலையில் உதயகுமாருடன் ஷில்பாவுக்கு திருமணம் நடந்தது. இதனால் ஷில்பா வேலைக்கு செல்வதில்லை. ஷில்பாவை பார்க்க முடியாததால் கள்ளக்காதலன் சரவணனும் வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊரிலேயே பைக் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.

உதயகுமார் வெளியூரில் வேலைக்கு சென்றுவிடுவதால் கள்ளத்தனமாக ஷில்பாவும், சரவணனும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இவர்களுக்கு இடையிலான நெருக்கம் அதிகமானதால் தனது வீட்டிற்கே சரவணனை அழைத்து வந்து ஷில்பா உல்லாசமாக இருந்தார். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு இடைஞ்சலாக இருந்ததால், கணவரின் மூத்த தங்கையான லட்சுமியை கடந்த 6 மாதங்களுக்க முன்பு எலி மருந்து கொடுத்து ஷில்பா கொன்றார். லட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கற்பனை கதையை ஷில்பா அவிழ்த்து விட்டார்.

இதனை குடும்பத்தினர், உறவினர்கள் நம்பியதால் கணவரின் 2–வது தங்கையான உதயகுமாரியையும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொன்றார்.

இந்த நிலையில் வீட்டில் கணவரை தவிர மீதமுள்ள மாமனார் பாலு, மைத்துனன் லட்சுமணனையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி 2 நாட்களுக்கு முன்பு பாலில் விஷம் கலந்து ஷில்பா கொடுத்தார்.

விஷம் கலந்த பாலை குடித்த மைத்துனன் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். மாமனார் பாலு பிழைத்துவிட்டார். இந்த 3 கொலைகளுக்கும் கள்ளக்காதலன் சரவணன் உடந்தையாக இருந்ததாக ஷில்பா வாக்குமூலம் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷில்பாவையும், கள்ளக்காதலன் சரவணனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து எஸ்.பி. செந்தில்குமாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணப்பாறை கோவில் திருவிழாவில் வாலிபரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது!!
Next post தந்தை–உறவினர்களால் உயிருக்கு ஆபத்து: காதல் ஜோடி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்!!