இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்!!

Read Time:2 Minute, 35 Second

6719313a-4d8c-44bd-b9ed-a592237ae726_S_secvpfதிருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம் செய்ததாக பரிமளா கன்டோன்மெண்ட் மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த பரிமளாவை இன்ஸ்பெக்டர் முருகேசன் தாக்கியதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து பரிமாள வீடு திரும்பினார். அப்போது அவர் வாடகைக்கு இருந்து வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்யும்படி கூறி விட்டாராம், இதனால் அவர் தற்போது வேறொரு இடத்தில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனது மருத்துவ பரிசோதனை அறிக்கையை வாங்குவதற்கு வந்தார். அப்போது அவர் இன்ஸ்பெக்டர் முருகேசன் போன் மூலம் ஒருவரிடம் பேசி தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதை அந்த நபர் பதிவு செய்துள்ளதாகவும் கூறி அந்த உரையாடல் பதிவை வெளியிட்டார்.

அதில் பேசும் நபர் ‘நான் மெடிக்கல் லீவில் உள்ளேன். அவளை ஆள் வைத்து கொலை செய்து மூட்டையில் கட்டி முள்காட்டிற்குள் வீசி விடுவேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என கூறுகிறார். இதைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும், உடனடியாக முருகேசனை கைது செய்ய வேண்டும் என பரிமளா போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் பேசியதாக கூறப்படும் உரையாடல் வாட்ஸ் மூலம் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம்: நேபாள நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய மதுரை மாணவி பேட்டி!!
Next post மணப்பாறை கோவில் திருவிழாவில் வாலிபரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது!!