ஸ்ரீவைகுண்டத்தில் பெண் வெட்டிக்கொலை: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

Read Time:2 Minute, 9 Second

8658a02e-e535-4b9b-a13b-bf9ba89c0d39_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா (33). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் முருகன் தனது மனைவி ஜெயகலாவை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று மாலை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைதான முருகன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:–

நுங்கு, பதநீர் வியாபாரம் செய்து வரும் எனக்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் எனது மனைவிக்கு தெரியாமல் பேசி, பழகி வந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விசயம் எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார். அடிக்கடி என்னை மனைவி திட்டி வந்ததால் ஆத்திரம் அடைந்து அவரை அரிவாளால் வெட்டி கொன்றேன்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து கைதான முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலசபாக்கம் அருகே காதல் தகராறில் வாலிபர் எரித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்!!
Next post திருநங்கை மீது ஆசிட் வீச்சு: கைதான வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஜெயிலில் அடைப்பு!!