கள்ளத்தொடர்புக்கு இடையூறு: மாமனார், மைத்துனருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த இளம்பெண் கைது!!

Read Time:5 Minute, 4 Second

c59963ba-b93c-402a-91d8-b53fee9dcfec_S_secvpfதிருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55), கூலி தொழிலாளி. அவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10).

உதயகுமாருக்கும், மேட்டுசக்கரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உதயகுமார் ராமநாதபுரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார்.

வேலை சம்பந்தமாக ராமநாதபுரம் செல்லும் உதயகுமார் எப்போதாவதுதான் ஊருக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் ஷில்பாவிற்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

கணவன் வீட்டில் இல்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அந்த வாலிபரை ஷில்பா வீட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது அந்த வாலிபர் அடிக்கடி வந்து செல்வதை லட்சுமணன் நோட்டமிட்டு வந்துள்ளார்.

மாமனாரும், மைத்துனரும் உயிருடன் இருந்தால், தன்னால் உல்லாசம் அனுபவிக்க முடியாது. எனவே, அவர்கள் 2 பேரையும் கொலை செய்வது என ஷில்பா முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் பாலு, லட்சுமணன் ஆகிய 2 பேருக்கும் பாலில் பூச்சிமருந்து (விஷம்) கலந்து கொடுத்தார்.

அதனை வாங்கி குடித்த 2 பேரும் சிறிது நேரத்தில் வாந்தி–பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். பின்னர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் மைத்துனரான சிறுவன் லட்சுமணன் பரிதாபமாக இறந்தான்.

பாலு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் ஷில்பாவை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலன் தூண்டுதலின் பேரில் ஷில்பா மாமனார், மைத்துனருக்கு விஷம் வைத்தது தெரியவந்தது. திருமணத்துக்கு முன்பு ஷில்பா கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.

அங்கு வேலை பார்த்த தர்மபுரி பாலக்கோடு பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் ஷில்பாவுக்கு அவரது பெற்றோர்கள் குரிசிலாப்பட்டு உதயகுமாருக்கு நிச்சயம் செய்தனர். உதயகுமார் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

இதனை பயன்படுத்தி ஷில்பா திருமணத்துக்கு பின்னரும் காதலனுடன் தொடர்பு வைத்தார். இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். ஷில்பாவால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதனால் வீட்டில் இருக்கும் மாமனார், மைத்துனர் இருவரையும் கொலை செய்து விட்டால் கணவர் இல்லாத நேரத்தில் தனிமையாக இருக்கலாம் என அவரது கள்ளக்காதலன் தூண்டி விட்டுள்ளார்.

அதன்படி பாலில் விஷம் கலந்து மாமனார், மைத்துனருக்கு கொடுத்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இந்த தகவலையடுத்து ஷில்பாவின் கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு உதயகுமாரின் முதல் தங்கை லட்சுமி (வயது 11) திடீர் வயிற்றுபோக்கு ஏற்பட்டு இறந்தார். 3 மாதத்துக்கு முன்பு 2–வது தங்கை உதயகுமாரி (7) திடீர் வயிற்று போக்கால் பலியானார். இவர்களுக்கு ஷில்பா விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS & VIDEO) யாழ். சாட்டி கடற்கரையில், காம விளையாட்டில் யுவதிகள்..!!
Next post சீர்காழி அருகே பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருந்த கும்பல்: போலீசார் விசாரணை!!