ஈரோடு மாநகராட்சி முன் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்த குடி மகன்!!

Read Time:3 Minute, 42 Second

af7f35c2-ae2a-45a1-a273-5d4104d8c7a3_S_secvpfஈரோடு மாநகராட்சி மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் முன்பகுதி உள்ள ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஈரோடு நகரில் மழை பெய்தது. அந்த சமயம் ஈரோடு மாநகராட்சி முன் ரோட்டின் மத்தியில் தடுப்பு சுவர் அருகே ஒரு குடி மகன் நடந்து வந்த போது திடீரென நடுரோட்டிலேயே போதையில் விழுந்தார்.

அவரது 2 கால்களும் ரோட்டில் கிடந்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அவர் அருகே வந்ததும் சுதாரித்து ஓடித்து கொண்டு சென்றது.

வாகனங்களில் வந்த வர்கள் யாரும் அந்த குடி மகனை கண்டு கொள்ளவும் இல்லை. ரோட்டில் நடந்து சென்றவர்களும் அவரை பார்த்தும் பார்க்காமல் சென்றனர்,

அப்போது மழை பெய்த தால் ரோட்டோரம் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் வண்டியை நிறுத்தி நின்று கொண்டிருந்தனர். பெரிய மாரியம்மன் கோவில் விழாவையொட்டி பந்தல் போட்டிருந்ததால் பிரிக்கப்படாமல் இருந்த பந்தலுக்கு அடியில் ஒரமாக நின்று கொண்டிருந்தனர்.

ரோட்டில் விழுந்து கிடந்த குடிமகனின் உடல் பாதி நடுரோட்டில் கிடந்தது. இதனால் எந்த நேரத்திலும் அந்த வழியாக வரும் வாகனம் அவர் மீது ஏறி விபரீதம் நடக்கும் சூழ்நிலை உள்ளது.

அப்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரும் மழைக்காக ஓதுங்கி நின்றார்.

அவரது கண்ணிலும் குடிமகன் ஒருவர் ரோட்டில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

உடனே அவர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ரோட்டில் விழுந்து கிடந்த குடிமகனை சத்தம் போட்டு எழுப்பினார். ஆனால் அந்த குடிமகனோ எழுந்த மாதிரி தெரியவில்லை. இதனால் கையில் இருந்த கம்பால் இரண்டு தட்டு தட்டினார். உடனே அந்த ஆசாமி எழுந்தார்.

போலீஸ் என்றும் பாராமல் அவரிடமே அந்த குடிமகன் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். அப்போது அந்த குடிமகனுக்கு தெரிந்த 2 பேர் அங்கு ஓடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சி கூத்தாடி அந்த குடி மகனை தூக்கி கொண்டு போனார்கள்.

எப்படியோ.. ஒரு குடி மகனின் உயிரை போலீஸ் அதிகாரி காப்பாற்றி விட்டார். அவர் மட்டும் தகுந்த நேரத்தில் வந்து அந்த குடிமகனை எழுப்பி அனுப்பி இருக்காவிட்டால் அவரது உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்.

‘‘உயிரையே துச்சமென நினைத்து குடிக்கும் அளவுக்கு மதுபோதையில் அப்படி என்ன தான் இருக்குமோ…?’’ நேரில் பார்த்த பொதுமக்கள் வேதனையுடன் கூறியபடி சென்றதையும் கேட்க முடிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடைகளை வென்ற உத்தமவில்லன்!!
Next post (PHOTOS & VIDEO) யாழ். சாட்டி கடற்கரையில், காம விளையாட்டில் யுவதிகள்..!!