குடித்து விட்டு மேடையில் உளரிய நடிகை!!

Read Time:3 Minute, 0 Second

Urvasiதனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஊர்வசி, கேரளாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்கு குடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனது 43வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் மீண்டும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து உத்தமவில்லனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிப்பில் நல்ல பெயர் வாங்கும் அவர், பொது வாழ்க்கையில் சர்ச்சைக்கு உள்ளாகி வருவது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சங்க துவக்க விழாவுக்கு வந்த ஊர்வசி குடித்துவிட்டு நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார்.

அவர் போதையில் இருப்பது தெரியாத நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், மேடையில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து மைக் முன் வந்த ஊர்வசி, சரமாரியாக உளற ஆரம்பித்துள்ளார். ‘இது பி.ஜே.பி. நடத்தும் கூட்டமா அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணி நடத்தும் கூட்டமா என அவர் உளறியதால் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து ஊர்வசியை பேச அனுமதித்தால் துவக்க விழா நிகழ்ச்சி கேலிக்குரியதாகிவிடும் என கருதிய பொறுப்பாளர்கள், பேச்சை நிறுத்துமாறு சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்புவதற்காக காருக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர், நிகழ்ச்சி பொறுப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு வருவதற்குள் விழா குழுவினர் படாதபாடு பட்டுவிட்டனர். அவரது இந்த உளறல் பேச்சு வீடியோவை யூ டியூபில் பலரும் பார்த்துவருகின்றனர்.

குடித்துவிட்டு வருவது ஊர்வசிக்கு ஒன்றும் புதிதல்ல. தனது முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனிடம் விவாகரத்து கேட்ட வழக்கில், விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு ஆஜரானபோதும் அவர் குடித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்!!
Next post கவர்ச்சிக்கு மாறிய நீத்து!!