தூத்துக்குடியில் மேற்கு வங்க வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு!!

Read Time:1 Minute, 32 Second

f405ce6a-c05c-4c91-bbb0-24fc61a40729_S_secvpfதூத்துக்குடி 4–ம் கேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 10 வாலிபர்கள் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தூத்துக்குடி மீளவிட்டானில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மேற்கு வங்க கூலித்தொழிலாளியான நரேன் மண்டல் என்பவர் மீளவிட்டானில் உள்ள 4–ம் கேட் செல்லும் தார் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் நரேன் மண்டலை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு அக்கும்பல் தப்பியோடி விட்டது.

இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க வாலிபர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து: செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் திடீர் உண்ணாவிரதம்!!
Next post மணப்பாறையில் கோவில் திருவிழாவில் வாலிபர் படுகொலை: மறியல்–போலீசாருடன் மோதல்!!