நெல்லை இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து: செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் திடீர் உண்ணாவிரதம்!!

Read Time:3 Minute, 38 Second

c7939f7d-990e-4816-8bfb-9ff0e95327db_S_secvpfநெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளவர் முருகேசன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் ஆகும். இவர் இதற்கு முன்பு திருச்சியில் வேலை பார்த்த போது பரிமளா (வயது 35) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 25–ந்தேதி திருச்சி வந்த முருகேசன் கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியில் உள்ள பரிமளா வீட்டிற்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ததாக பரிமளா திருச்சி கன்டோன்மெண்ட் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து முருகேசன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரிமளா, இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்யக்கோரி இன்று சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

எனது வீட்டிற்குள் புகுந்து முருகேசன் என்னை பலாத்காரம் செய்து விட்டார். அவர் மீது போலீசில் புகார் செய்து விட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் வார்டில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். அங்கு எனக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது பெண்கள் வார்டுக்குள் அத்துமீறி நுழைந்த முருகேசன் என் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றார். பின்னர் என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றினார். ஆனால் நான் அவரிடம் இருந்து தப்பி விட்டேன்.

அவர் என்னை ஆஸ்பத்திரியில் இருந்து இழுத்து சென்ற காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சியை தரும்படி ஆஸ்பத்திரி டீனிடம் நான் கேட்டுள்ளேன்.

தற்போது போலீஸ் தேடுவதால் அவர் தலைமறைவாக உள்ளார். அவர் மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை, கைதும் செய்யவில்லை. எனவே அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. முருகேசனை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நான் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி உள்ளேன்.

என்னை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதுவரை எனது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய பரிமளா திடீரென சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்குக்கு தயாரானபோது உயிர் பிழைத்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் மீண்டும் உயிர் பிரிந்தது!!
Next post தூத்துக்குடியில் மேற்கு வங்க வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு!!