இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்குக்கு தயாரானபோது உயிர் பிழைத்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் மீண்டும் உயிர் பிரிந்தது!!

Read Time:1 Minute, 39 Second

0e4ddea6-8dcc-4cd2-9d6c-c25d62b8f0d0_S_secvpfபுதுவை வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (வயது 54), தனியார் எண்ணை நிறுவன தொழிலாளி.

பாரிக்கு சமீப நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. எனவே வேறுவழியின்றி பாரியை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.

இன்று காலையில் திடீரென பாரியின் உடலில் எந்த அசைவுகளும் இல்லை. எனவே அவர் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். பாரியின் உடலை பிரத்யேக கண்ணாடி பெட்டியில் வைத்துவிட்டு இறுதி சடங்குக்கான வேலைகளில் ஈடுபட்டனர்.

கண்ணாடி பெட்டிக்குள் வைத்த சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு பாரியின் கை, கால்கள் அசைந்தன. கண்களையும் விழித்து பார்த்தார். இதனால் உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

அவசர கதியில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு பாரியை கொண்டு சென்றனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுமார் 15 நிமிடங்களில் பாரி இறந்தார். இந்த சம்பவம் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜோலார்பேட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பாலில் விஷம் கலந்து சிறுவன் கொலை?
Next post நெல்லை இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து: செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் திடீர் உண்ணாவிரதம்!!