திருப்பூர் கலெக்டர் ஆபீசில் கைக்குழந்தையுடன் இளம் பெண் தர்ணா!!

Read Time:4 Minute, 14 Second

b2ff0342-e01e-4010-9a13-38bb03bffe33_S_secvpfதிருப்பூர் கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. குறைதீர்க்கும் முகாமையொட்டி கலெக்டர் கோவிந்த ராஜ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது 1½ மாத ஆண்குழந்தையுடன் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கண்ணீரும், கம்பலையுமாக அங்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். பின்னர் கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த இளம்பெண் கலெக்டர் கோவிந்தராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி கிராமம் ஆலமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்த எனது பெயர் சுப்புலட்சுமி. எனக்கு 21 வயதாகிறது. எனக்கும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மயிலம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2.6.2014 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது 5 பவுன் நகை, மோட்டார் சைக்கிள், 50 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக வழங்கினோம். தொடக்கத்தில் எங்கள் வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது.

அதன் விளைவாக நான் கர்ப்பமானேன். இதை எனது கணவரிடம் சொன்ன போது அவர் மகிழ்ச்சி அடையவில்லை. கர்ப்பத்தை கலைத்துவிடு என்று கூறினார். ஏன் இப்படி சொல்கிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

அந்த சமயத்தில் வீட்டில் இருந்த எனது மாமனாரும், மாமியாரும் எனது கணவரிடம் ‘உன் மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அவள் குழந்தை பெற்றால் அழகு குறைந்து விடும். இப்போது குழந்தை தேவையில்லை என்று கூறி கண்டிப்பாக கர்ப்பத்தை கலைத்து விடு’ என்றனர்.

அவரும் மறுப்பேதும் தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டார். அதன் பின்னர் தான் எனக்கு அவர் மேல் சந்தேகம் வலுத்தது. நான் கருவை கலைக்க முடியாது என்றதும் அவர்கள் வேறு கோணத்தில் இறங்கினார்கள்.

ரூ.2 லட்சம் வாங்கி வா என்று மிரட்டினார்கள். அந்த அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை என்றதும் நாங்கள் சொல்வதை கேட்டால் நீ வரதட்சணை கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என்றனர். அதன் பின்னர் எனது கணவர் எனது அம்மா கூறும் வி.ஐ.பி. மற்றும் உள்ளூர் விசைத்தறி தொழில் அதிபருடன் நீ சென்று வந்தால் ரூ.2லட்சம் கொண்டுவர வேண்டாம். அவர்கள் கைநிறைய பணம் தருவார்கள். அதன்மூலம் நாம் கஷ்டம் இல்லாமல் வாழலாம் என்றார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன். குழந்தை பிறந்த பின்னர் இப்போது புகார் மனு கொடுக்க வந்துள்ளேன்.

என்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயலும் எனது கணவர், மாமனார், மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நகை பட்டறை அதிபர்!!
Next post வகுப்புக்கு ஒழுங்காக செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!!