5 கி.மீ. ஓடி சாதனை படைத்த 9 மாத கர்ப்பிணி: சாதிக்க வைத்த கணவர்!!

Read Time:2 Minute, 13 Second

9e71a6a1-9d41-470e-a351-3b0af79fecf7_S_secvpfதெலுங்கானாவில் 9 மாத கர்ப்பிணி பெண், தன் கணவரின் வழிகாட்டுதலுடன் 5 கி.மீ. தூரம் ஓடி சாதனை படைத்துள்ளார்.

கமரபு லெட்சுமி என்ற அந்த 42 வயது பெண், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 8-ம் தேதி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த போதே 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது அடுத்த கட்டமாக 5 கிலோ மீட்டர் தூரத்தைக் ஓடிக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் நேற்று காலை 6.30 மணிக்கு தனது ஓட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்த லெட்சுமி, 7 மணிக்கு தன் இலக்கை அடைந்தார். அப்போது, அங்கு இருந்த மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அனைவரும் லெட்சுமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவரது சாதனையை தெலுங்கானா சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து அதற்குரிய சான்றிதழையும் கொடுத்தனர்.

தனது சாதனைக்கு விளையாட்டு வீரரான தனது கணவர் ரவிச்சந்தரே காரணம் எனும் லெட்சுமி, 2013-ம் வருடம் இதேபோன்று 5 கி.மீ. தூரம் ஓடிய பிறகு தனது முதல் குழந்தையை பிரசவித்துள்ளார்.

9 மாத கர்ப்பிணியாக இருந்த போதும் ‘மிஷன் ககாடியா’ எனப்படும் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் அரசின் திட்டத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 5 கி.மீ. தூரம் ஓடியுள்ளார் கமரபு லெட்சுமி. வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள இவரது ஓட்டம், கின்னஸ் சாதனைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரத்தில் மணமகன் விபத்தில் சிக்கியதால் ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்!!
Next post 8 கிலோ தலையுடன் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி: அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்!!