காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!

Read Time:4 Minute, 16 Second

31b46784-22f3-4778-80c4-01a18ee23921_S_secvpfசென்னை திருவெற்றியூர் இசக்கிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி(24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். முத்துலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே முத்துலட்சுமி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அதன் பிறகும் ஏற்கனவே வேலை செய்து வந்த அதே கம்பெனியில் மீண்டும் வேலையில் சேர்ந்தார்.

முத்துலட்சுமி வேலை செய்யும் அதே கம்பெனியில் காட்பாடி காந்திநகரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27), தாராபடவேடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் (27) ஆகியோர் வேலை செய்தனர். முதலில் மோகன்ராஜீடன் முத்துலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியது. மோகன்ராஜீம், முத்துலட்சுமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

முத்துலட்சுமிக்கும், மோகன்ராஜீக்கும் இடையேயான கள்ளக்காதலை அறிந்த வாசுதேவன் தொடர்ந்து நோட்டமிட்டார். சரியான தருணத்தில் முத்துலட்சுமிக்கு வாசுதேவன் வலைவிரித்தார்.

இதில் வாசுதேவனுக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே மறைமுக கள்ளத்தொடர்பு இருந்தது. முதல் காதலன் மோகன்ராஜீக்கு தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

நாளடைவில் இருவரின் கள்ளக்காதல் விவகாரமும் தெரியவர முத்துலட்சமிக்காக வாசுதேவனும், மோகன்ராஜீம் போட்டி போட்டனர். பின்னர் முத்துலட்சுமியை அழைத்து இருவரும் பேசியுள்ளனர்.

அதில் மோகன்ராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முத்துலட்சுமி கூறினார். முத்துலட்சுமியின் திருமண பேச்சுவார்த்தையால் கள்ளக்காதலர்கள் 2 பேரும் நைசாக பேசி விலக தொடங்கினர்.

பின்னர் கடந்த 22–ந் தேதி மோகன்ராஜை சந்திக்க முத்துலட்சுமி காட்பாடி வந்தார். இருவரும் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தித்து பேசினர்.

அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துலட்சுமி பேசினார். அதற்கு மோகன்ராஜ் மறுக்கவே, மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.

முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை திருவெற்றியூரில் உள்ள முத்துலட்சுமி வீட்டில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் கள்ளக்காதலர்கள் வாசுதேவன், மோகன்ராஜ் என முத்துலட்சுமி குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து வாசுதேவனையும், மோகன்ராஜையும் காட்பாடி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே பள்ளி மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!
Next post தொண்டி அருகே 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!