சங்கரன்கோவிலில் 2 குழந்தைகளின் தாயை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 34 Second

617210bd-2168-48cd-b835-f945cc500158_S_secvpfநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜ், பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 19–ந்தேதி சத்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சங்கரன்கோவில் புதுமனை 6–வது தெருவை சேர்ந்த சக்திவேல் (32) என்பவர் வீடு புகுந்து சத்யாவை கற்பழித்துள்ளார். பின்னர் அவரையும் அவரது குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுவிட்டார்.

இது குறித்து ஜேசுராஜ் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்ததும் சக்திவேல், சத்யாவையும், அவரது குழந்தைகளையும் நேற்றிரவு சங்கரன்கோவிலில் விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சத்யா நடந்த சம்பவம் பற்றி கணவர் ஜேசுராஜிடம் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

கடந்த 19–ந்தேதி வீடு புகுந்து சத்யாவை கற்பழித்த சக்திவேல், அது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் அவரையும், அவரது குழந்தைகளையும் கடத்தி சென்ற அவர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சத்யாவை அறையில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்தும், பத்திரிகைகளில் செய்தி வெளியானதையும் அறிந்த சக்திவேல், சத்யாவையும் அவரது குழந்தைகளையும் நேற்றிரவு சங்கரன்கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்துவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சிக்கினார்!!
Next post தேனி அருகே பள்ளி மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!