சேலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சிக்கினார்!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ளது சங்கீதம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). கட்டிடம் கட்டும் வேலைக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி கடந்த 9 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில் மூத்த மகளுக்கு 15 வயதாகிறது. இந்த பெண் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். 2–வது மகளுக்கு 10 வயதாகிறது. 5–ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்.
பெருமாளுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். தினமும் செக்ஸ் டார்ச்சரும் கொடுத்து வந்தார்.
தந்தையின் இந்த நடவடிக்கைகளை 2 மகள்களும் சகித்து கொண்டு இருந்தனர். ஆனால் தொடர்ந்து அவர் செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த 2 பெண் குழந்தைகளும் தனது தந்தை பற்றி அருகில் வசிக்கும் நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நர்ஸ் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சைல்ட் லைனுக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள். அவர்கள் உங்களை காப்பாற்றி படிக்க வைப்பார்கள் என தெரிவித்தார்.
இதனால் 2 பெண்களும் 1098–க்கு போன் செய்து தங்களை தங்களது தந்தையிடம் இருந்து மீட்டு செல்லுங்கள் என தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சைல்ட் லைன் பணியாளர் சில்வியா மற்றும் நிர்வாகிகள் சங்கீதம்பட்டி சென்று 2 பெண் குழந்தைகளை தனியே அழைத்து விசாரித்தனர். அப்போது 2 குழந்தைகளும் தங்களின் தந்தை செக்ஸ் டார்ச்சர் தருவதாகவும், அவரிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பிறகு இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழும தலைவர் சேவியரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் நேற்று சங்கீதம்பட்டி சென்று 2 பெண் குழந்தைகளிடம் விசாரித்தார். அப்போதும் 2 பெண்களும் தங்களை தந்தையிடம் இருந்து காப்பாற்றுங்கள் என தெரிவித்தனர்.
பின்னர் சேவியர் இந்த சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெருமாள் மீது புகார் செய்தார். இதன்பின்னர் 2 மகள்களும் சேலத்தில் உள்ள சைல்ட் லைனுக்கு அழைத்து வந்து தங்க வைத்தார்.
சேவியர் தந்த புகார் மனு மீது இன்ஸ்பெக்டர் சாந்தா மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில் பெருமாள் தனது மகள்களிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை இன்று அதிகாலை போலீசார் பிடித்து வந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சேலம் குழந்தைகள் நல குழும தலைவர் சேவியர் கூறியதாவது:–
2 பெண் குழந்தைகளிடம் பெற்ற தந்தையே தவறாக நடந்துள்ளார். இது பற்றி எங்களுக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் 2 நாட்களாக நாங்கள் விசாரித்தோம். இதில் பெருமாள் குழந்தைகளிடம் தவறாக நடப்பது தெரியவந்தது. இதனால் நாங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சைல்ட் லைனில் தங்க வைத்துள்ளோம். 2 குழந்தைகள் பற்றி அரசுக்கு தெரிவித்து அவர்களை படிக்க வைக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
பெற்ற மகள்களிடமே தவறாக நடக்க முயன்ற பெருமாள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating