யானைகளுக்குப் பேர்போன யால சரணாலயப் பகுதியில் தேடுதல் தொடர்கிறது

Read Time:3 Minute, 46 Second

யால வன விலங்கு சரணாலயப் பகுதியில், இலங்கை இராணுவ நிலை ஒன்றை தாக்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை, அங்கு அந்த தேசியப் பூங்காவெங்கிலும் தேடும் நடவடிக்கையில், இலங்கை சிறப்புப் படைப்பிரிவினர் உட்பட சுமார் 500 படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது வருடாந்த விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு சரணாலயம், மீண்டும் திறக்கப்படுவது, இந்த தேடுதல் வேட்டை முடியும் வரை தாமதிக்கப்ப்படும். கடந்த திங்களன்று, அங்கு இராணுவ முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் அங்கு எங்காவது இன்னமும் பதுங்கியிருக்கிறார்களா என்று, யால சரணாலயப் பகுதியெங்கும் படையினர் தற்போது தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில் இருந்த சிறிய இராணுவ முகாம் ஒன்று தாக்கப்பட்ட போது, அதில் 6 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காகச் சென்ற ஒரு உழவு இயந்திரம் நிலக்கண்ணியில் சிக்கிய போது மேலும் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார். இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் அபாரமாகக் கவரும் இந்த யால தேசிய வன விலங்குச் சரணாலயம், சிறுத்தைகளுக்கும், யானைகளுக்கும் பேர்போனது. பெரும்பாலானோர், இந்த பூங்காவின் மேற்குப் பகுதியையே விரும்பிச் சென்று பார்ப்பார்கள். ஆனால், இந்த தாக்குதல் இடம்பெற்றது தேசியப் பூங்காவின் கிழக்குப் பகுதியில். இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் இப்பாடியான தாக்குதல்கள் அபூர்வமானவை.

கடுமையான சண்டைகளை அடுத்து, கிழக்கில் விடுதலைப்புலிகளின் சிறிய குழுக்கள் எஞ்சியிருக்கலாம் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்த போதிலும், கடந்த ஜூலையில், கிழக்கிலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் முற்றாகக் கொண்டு வந்து விட்டதைக் குறிக்கும் வகையில், கொழும்பில் அணிவகுப்பை இலங்கை அரசு நடத்தியது. ஆனால், தமது தளபதிகளும், அணிகளும் இன்னமும் கிழக்கில் உள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், கூறுகிறார்.

இதற்கிடையே இந்த யால பகுதியில், தலகஸ்மங்கட இராணுவ முகாமில் இருந்த மேலும் கிளெமோர் கண்ணிவெடி இன்று வெடித்ததில் ஒரு இராணுவச் சிப்பாயும், இரண்டு வன அதிகாரிகளும் காயமடைந்ததாக இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். யாலவில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்த போது இடம்பெற்ற இந்த வெடிப்பு ஒரு விபத்தாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 விடுதலைப் புலிகள் பலி; ராணுவ வீரர்கள் 9 பேர் சுட்டுக் கொலை
Next post முஷாரப் ராணுவ தளபதியாக தொடரலாமா? முழு பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு