மிஸ்டு கால் தொடர்பால் விபரீதம்: கணவரை கைவிட்டு காதலனை தேடி ஓடிய பெண்!!

Read Time:5 Minute, 21 Second

2f888293-951f-49e2-8465-68c0277b6f41_S_secvpfதிருவட்டாரை அடுத்துள்ள கல்லடி மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரி, (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (26) இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

குமாரிக்கு 14 வயது இருக்கும்போதே ராஜாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. குமாரிக்கு வயது குறைவு என்பதாலும், இருவரும் வேறு மதத்தினர் என்பதாலும் அவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது. அதன் பிறகு போலீசார் அவர்களை மீட்டு ராஜா மீது கடத்தல் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த நிலையில் வருடங்கள் உருண்டதால் குமாரிக்கு 18 வயது ஆன நிலையில் அவரும் ராஜாவும் திருமணம் செய்து கொண்டனர். ராஜா மீதான வழக்கும் வாபஸ் பெறப்பட்டு, அவர்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமாரி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இதுபற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதுரை போலீசார் குமாரியையும், ஒரு வாலிபரையும் அழைத்துக் கொண்டு குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்கள் இருவர் பற்றியும் போலீசார் கூறிய தகவல்கள் குலசேகரம் போலீசாரையே திகைக்க வைப்பதாக இருந்தது. குமாரிவுடன் வந்த வாலிபர் மதுரையைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை வாலிபர் கன்னியாகுமரியில் உள்ள தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தவறுதலாக குமாரியின் செல்போனுக்கு இந்த அழைப்பு சென்றுள்ளது. அதன் பிறகு அந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த வாலிபர் தவறுதலாக நம்பரை மாற்றி போன் செய்துவிட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

ஆனால் குமாரி அதன் பிறகு அந்த வாலிபருடன் போனில் அடிக்கடி பேசி உள்ளார். தனக்கு மதுரையை சுற்றிப்பார்க்க ஆசையாக உள்ளதாக கூறி, பேச்சை ஆரம்பித்த குமாரி, நாளடைவில் தான் அவரை காதலிப்பதாகவும், கூறி உள்ளார்.

அவரது இனிமையான பேச்சில் மயங்கி அந்த வாலிபரும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தான் திருமணமானவர் என்பதை குமாரி அவரிடம் மறைக்கவில்லை. அந்த வாலிபரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் அந்த வாலிபரை சந்திப்பதற்காக குமாரி மதுரைக்கு ஓட்டம் பிடித்தார். அந்த வாலிபரும், குமாரியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக கூறி உள்ளார்.

குமாரி திருமணம் ஆனவர் என்பதை தெரிந்து கொண்ட அந்த வாலிபரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த தகவலை மதுரை போலீசுக்கு தெரிவித்தனர்.

போலீசார் குமாரியிடம் விசாரித்தபோது அவர் அந்த வாலிபரைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறினார். அந்த வாலிபரும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதனால் அவர்கள் இருவரையும் குலசேகரம் அழைத்து வந்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

குலசேகரம் போலீசாரும் குமாரியிடம் பல்வேறு அறிவுரைகளை கூறினாலும் அவர், தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். இதனால் அவர்கள் திருமணம் செய்வதாக இருந்தால் சட்டப்படி, குமாரி விவாகரத்து பெற வேண்டும் என்று கூறினர்.

காதலனுக்காக கணவரை விவாகரத்து செய்யவும் தயார் என்று குமாரி பிடிவாதமாக கூறியதால் அவரிடம் மதுரை போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். குமாரியும் தனது காதலனுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி கடத்தல்: வாலிபர் உள்பட 3 பேர் மீது புகார்!!
Next post திருவண்ணாமலையில் காதலனுடன் தங்கை மாயமானதால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!!