பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி கடத்தல்: வாலிபர் உள்பட 3 பேர் மீது புகார்!!

Read Time:1 Minute, 41 Second

a8373c3a-23f9-4c62-84cb-bddda98fecc8_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பெரியகடை வீதியை சேர்ந்தவர் செய்யது அகமது. இவரது மகள் ரபியா (வயது 19). இவர் கீழக்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் பேஸ்புக் மூலம் தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் ரபியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது.

கடந்த ஜனவரி மாதம் ரபியா வீட்டை விட்டு வெளியே அருண்குமாருடன் சென்றுவிட்டாராம். அவரை பெற்றோர் அழைத்து வந்து அருண்குமாரை எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் தேவிபட்டிணம் ஆஸ்பத்திரி அருகே வந்த அருண்குமார் மீண்டும் ரபியாவை கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரபியாவின் தாத்தா ஜாகிர் உசேன் கொடுத்த புகாரில் அருண் குமாருக்கு உதவியாக விஜய்குமார், அஜித்குமார் ஆகியோர் செயல்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தேவிபட்டிணம் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருக பூபதி வழக்குப்பதிவு செய்து ரபியா மற்றும் அவரை கடத்திய 3 பேரை தேடிவருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!
Next post மிஸ்டு கால் தொடர்பால் விபரீதம்: கணவரை கைவிட்டு காதலனை தேடி ஓடிய பெண்!!