குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற பெண்ணை காரில் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரர்கள்!!

Read Time:1 Minute, 45 Second

0a715649-b402-4027-af34-6aed68c14c3f_S_secvpfபாலியல் குற்றங்களின் உறைவிடமான உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக நகரத்திற்குச் வந்திருந்த கிராமத்துப் பெண்ணை, கொடூர கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

‘பெகும்பால்’ கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக நேற்று மதியம் மீரட் நகருக்கு சென்றிருந்த அந்தப் பெண், மருந்து வாங்கிவிட்டு வெளியே வந்த போது அவரை 2 வாலிபர்கள் காரில் இடைமறித்தனர். 40 வயதான அந்தப் பெண் 4 குழந்தையின் தாய் என்பது தெரிந்தும் அவரிடம் கனிவாக பேசிய வாலிபர்கள், அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறினைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்து ‘ஜானி கனல்’ என்ற பகுதியில் குப்பையைப் போல தூக்கி வீசி விட்டுச் சென்று விட்டனர். அந்த பகுதி வழியே ரோந்து பணிக்காக வந்த போலீசார் சுயநினைவிழந்த நிலையில் கிடந்த அந்த பெண்ணைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் சிக்கித் தவித்த 14-வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியினர் டெல்லி திரும்பினர்!!
Next post பிரசவத்தின்போது அஜாக்கிரத்தையால் மூளை பாதிப்பினால் குழந்தை இறப்பு: ஆஸ்பத்திரி, டாக்டருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்!!