ஏவுகனை சோதனை பெரும் வெற்றிவட கொரியா
தான் நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை தாக்கக் கூடிய திறமை படைத்த டேபோடாங்2 என்ற நீண்ட தொலைவு ஏவுகனை மற்றும் 9 நடுத்தர ரக ஏவுகணைகளை வட கொரியா ஏவி சோதனை நடத்தியது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த ஏவுகனை சோதனைகளை வட கொரியா நடத்தியது.
வட கொரியாவின் இந்த ஏவுகனை அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவுக்கு அருகில் உள்ள ஜப்பானும் இதை கண்டித்துள்ளது. இந்த ஏவுகனைச் சோதனை மூலம் எங்களை கோபப்படுத்த வட கொரியா ம¬யலுகிறது. எங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக வட கொரியா அறிவித்துள்ளதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்காப் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில், வட கொரியாவின் ஏவுகணைச் சோதனையைப் பார்த்து சர்வதேச சமுதாயம் பயந்து விடாது. வட கொரியாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன.
வட கொரியாவின் மிரட்டல்களை சமாளிக்க எங்களிடம் பல வகையான அஸ்திரங்கள் உள்ளன. உலக சமுதாயம் நம்மை ஒன்றும் செய்யாது என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டது வட கொரியா. ஆனால் வட கொரியாவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகக் கடுமையாக உள்ளது என்றார்.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் கிறிஸ்டோபர் ஹில், வட கொரிய விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஆசிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந் நிலையில், வட கொரியாவின் ஏவுகனைச் சோதனை குறித்து எப்படி ‘ரியாக்ட்’ செய்வது என்பது குறித்து பரிந்துரைக்குமாறு அந்நாட்டு உளவுத்துறை மூத்த அதிகாரி மற்றும் 3 அமைச்சர்களை அந்நாட்டு பாராளுமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே, வட கொரியாயை தென் கொரியா உறுதியாக கண்டிக்கவில்லை என்று அமெரிக்கா புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சியான யூரி கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான கிராண்ட் நேஷனல் கட்சி மற்றும் தென் கொரிய பத்திரிகைகள், தென் கொரிய அதிபர் ஹியூனுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் ஏவுகனைச் சோதனையை தடுத்து நிறுத்த அவர் தவறி விட்டதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கிடையே, நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால், வட கொரியாவுடன் செய்து கொண்ட மனிதாபிமான உதவிகளுக்கான ஒப்பந்தத்தை தென்கொரியா ரத்து செய்யக் கூடும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்நிலையில் வட கொரிய ஏவுகணை சோதனை குறித்து இன்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தொடர்ந்து விவாதிக்கவுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...