திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்!!

Read Time:2 Minute, 31 Second

f8dd2a08-0300-41a9-8c05-4e5e001d2eb3_S_secvpfகுஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த பாருக் மாலிக்(22) என்பவருக்கு பர்ஸானா பானு(22) என்ற பெண்ணை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

சல்மான்கான், அமீர்கான் போன்ற கணவர் வாய்க்க வேண்டும் என்று இளம்வயதில் மனக்கோட்டை கட்டிவந்த பர்ஸானாவுக்கு அம்ஜத்கானைப் போன்ற கருப்பு நிறம் கொண்ட பாருக் மாலிக் கணவராக வந்து வாய்த்தார். இதனால், கணவர் மீது வெறுப்பு வார்த்தைகளை நெருப்பாய் வாரி வீசிய பர்ஸானா, அவருடன் தாம்பத்தியம் தொடர்பான அனைத்தையும் தவிர்த்து விட்டார்.

‘இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும், துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்?’ என பாருக் பாடிய விரகப் பாடல்கள் பர்ஸானாவின் மனதை கரைக்கவில்லை. கணவரின் தொந்தரவு அதிகமாகும் வேளையில் அவரது நச்சரிப்பில் இருந்து தப்பிக்க தனது பெற்றோரின் வீட்டுக்கு அவர் சென்று விடுவது வழக்கம். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

வழக்கம்போல் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்ற பர்ஸானா, பத்து நாட்களுக்கு முன்னர் கணவர் வீட்டுக்கு வந்தார். மீண்டும் இருவருக்கும் இடையில் சண்டை தொடங்கியது. கடந்த புதன்கிழமை சண்டை மும்முரம் அடைந்து அடிதடியில் முடிந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கணவருடன் பண்ணை வீட்டுக்கு சென்ற பர்ஸானா, அங்கிருந்த பெரிய சுத்தியலால் அடித்து, பாருக் மாலிக்கின் தலையை நசுக்கிக் கொன்றார். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் விரைந்துவந்த போலீசார் பர்ஸானாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!!
Next post கொப்பல் அருகே கற்பழித்த மடாதிபதியுடன் பெண்ணுக்கு திருமணம்!!