கோவை ஜெயில் அதிகாரி டார்ச்சர் காரணமாக கைதி தற்கொலை முயற்சி?: விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ!!

Read Time:3 Minute, 45 Second

0ff417e5-d2a0-4bd1-8073-510e635f7a51_S_secvpfகோவை ஜெயிலில் உள்ள கைதிகள் சிலர் துன்புறுத்தப்படுவதாக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிறைத்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஈரோட்டை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் (30), கோவையை சேர்ந்த வெங்கடேஷ்(54) ஆகியோர் தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை பார்த்த ஜெயில் காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல, வெங்கடேஷ் பிளேடால் கை, கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

காவலர்கள் அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. வெங்கடேசை நேற்று மாலை கோவையை சேர்ந்த வக்கீல் தொல்காப் யன் ஜெயிலுக்குள் சென்று நேரில் பார்த்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோவை ஜெயிலில் கைதிகள் சித்ரவதை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயிலில் உள்ள சில காவலர்களே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளனர். எனவே ஜெயில் அதிகாரி ஒருவர் வெங்கடேஷிடம், வீடியோ காட்சிகளை எடுத்ததாக சில கைதிகள் மற்றும் காவலர்கள் மீது புகார் கொடுக்கும்படி டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை தனிமை சிறையில் போட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

வெங்கடேசை ஜெயிலில் பார்க்க சென்ற அவரது மனைவிக்கு செல்போன் மூலம் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும், வெங்கடேஷ் மீது போலீசில் பொய் வழக்கு பதிவு செய்தது தொடர்பாக அவரது மனைவி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி 2 மாதத்தில் அறிக்கை அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே வெங்கடேஷ் மீதான வழக்குகள் தொடர்பாக போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இது ஜெயில் காவலர்களுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே ஜெயில் அதிகாரிகள் டார்ச்சரால் மனமுடைந்தே வெங்கடேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!
Next post போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற கம்யூனிஸ்டு நிர்வாகி 2 பேர் கைது!!