சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிப்மர் ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்: புதுவை கோர்ட்டு தீர்ப்பு!!

Read Time:1 Minute, 38 Second

97b7c395-d37f-4c03-ac15-451174d091fd_S_secvpfபுதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அவர் கர்ப்பமானார். இதனால் மேட்டுபாளையம் போலீசார் 30.6.2014 அன்று பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து பரமசிவத்தை ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் உதவியாளர் பணியில் இருந்து பணி இடை நீக்கம் செய்தது. இவர் மீதான வழக்கு விசாரணை புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்துக்கு பிரிவு 376–ன் படி 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டபிரிவு 6–ன் படி 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் வாதாடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் கல்லூரிக்குள் கஞ்சா சப்ளை: கேரள மாணவர் கைது!!
Next post உலகின் அதிக எடை கொண்ட 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை!!