ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!

Read Time:4 Minute, 42 Second

78ba83a9-f6e2-428b-91df-ec04b95d5fac_S_secvpfதிண்டுக்கல்லில் மாணவருடன் ஓடிய ஆசிரியை கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நவீன செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே முறை தவறிய காதல், கள்ளத்தொடர்பு போன்ற அநாகரீக செயல்கள் பெருகி விட்டன.

சமீபத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை 10–ம் வகுப்பு மாணவனை காதலித்து ஓடிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் அதிர்வலைகள் ஓய்வதற்குள் திண்டுக்கல்லில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த தேவராஜ் மகள் செபாஸ்டின் சாரதி (வயது 21). திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுட்டோரியலில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

பிளஸ்–2 தேர்வில் தமிழைத் தவிர அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்த திண்டுக்கல் முள்ளிப்பாடியைச் சேர்ந்த சதீஸ்குமார் (18) என்ற மாணவர் அங்கு படித்து வந்தார்.

பாடம் தொடர்பாக சதீஸ்குமார் ஆசிரியை செபாஸ்டின் சாரதியிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டு வந்தார். மாலையில் வகுப்பு முடிந்த பின்னரும் சந்தித்து விளக்கம் கேட்பார். அவர்களிடையே ஏற்பட்ட இந்த நெருக்கமான பழக்கம் காதலாக உருமாறியது.

புனிதமான ஆசிரியை–மாணவர் உறவு முறைக்கு களங்கம் ஏற்படுமே என்று அவர்கள் சிறிதும் நினையாமல் காதலர்களாக மாறினர். வேண்டா வெறுப்புடன் பாடம் படிக்க வந்து கொண்டு இருந்த சதீஸ்குமார் அதன் பின்னர் ஆர்வத்துடன் டுட்டோரியல் வந்தார். பள்ளிப்பாடம் நடத்திய ஆசிரியைக்கு கண்களால் காதல் பாடம் நடத்தினார்.

மாலை நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் இருவரும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். பள்ளி தேர்வை பற்றி கவலைப்படாமல் பள்ளியறை தேர்வுக்கு தயாரானார்கள். உறவு முறையை காற்றில் பறக்க விட்டு காதல் லீலை புரிந்தனர். செல்போனில் அடிக்கடி பேசினால் மற்றவர்கள் சந்தேகப்படுவார்கள் என்று நினைத்த அவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் காதல் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

எனினும் அவர்களின் நடவடிக்கை அரசல் புரசலாக தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். ஆசிரியை செபாஸ்டின் சாரதிக்கு வேறிடத்தில் திருமணம் செய்து வைக்க வீட்டில் ஏற்பாடு செய்தனர். இதனால் தங்கள் காதல் கரைசேராதோ என்று கவலைப்பட்டனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஆசிரியை செபாஸ்டின் சாரதி, மாணவர் சதீஸ்குமாருடன் ஓட்டம் பிடித்தார்.

இதனையறிந்த செபாஸ்டின் சாரதியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவரது தந்தை தேவராஜ் தனது மகளை சதீஸ்குமார் பெற்றோர், சகோதரர் உதவியுடன் கடத்தி சென்று விட்டதாக திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் செய்தார். காதல் ஜோடி செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி என்னும் மலைக்கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு!!
Next post ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!